2021 சட்டமன்றத் தேர்தலைவிட வரும் தேர்தல் கடினமாக இருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இந்தியா டுடே ஏற்பாடு செய்த ‘தமிழ்நாடு ரவுண்ட் டேபிள்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், "பல்வேறு சாதனைகள் செய்துள்ளோம்; அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்து மீண்டும் வெற்றி பெறுவோம். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்" என கூறியுள்ளார்.