தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த மையத்திற்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, பணியாளர்கள், செவிலியர்கள் வருகைப் பதிவு உள்ளிட்டவற்றை சரி பார்த்தார். மேலும், அங்கிருந்த குழந்தைகளிடம் சிறிது நேரம் பேசி விளையாடினார்.