சீனாவின் ஷென்சென் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நிலக்கரியை எரிக்காமல் நேரடியாக மின்சாரமாக மாற்றும் 'ஜீரோ-கார்பன்' நிலக்கரி எரிபொருள் மின்கலத்தை உருவாக்கியுள்ளனர். பாரம்பரிய மின் உற்பத்தி நிலையங்களை போல நிலக்கரியை பொசுக்கி நீராவியை உருவாக்கி டர்பன்களை சுழற்றாமல், வேதியியல் வினைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவதால் நச்சு புகை வெளியேற்றம் முற்றிலும் தடுக்கப்படுகிறது.