சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி விவகாரம் தொடர்பான பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், காங்., கட்சியினரிடையே மின்னஞ்சல் ஒன்று வெளியாகி வைரலாகி வருவதாகக் கூறப்படுகிறது. அதில், ‘ஆட்சியில் பங்கு, கூடுதல் சட்டமன்றத் தொகுதிகள், வாரியங்கள் முதல் கூட்டுறவு சங்கங்கள் வரை பங்கு, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்கள்’ உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.