மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த ஊழியர் கைது

144பார்த்தது
மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த ஊழியர் கைது
கேரளம் மாநிலம் கொச்சியில், ஆன்லைன் உணவு விநியோகச் சேவையின் பெயரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த டெலிவரி ஊழியல் லிபின் கைது செய்யப்பட்டார். மட்டஞ்சேரி காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, 21 லிட்டருக்கும் அதிகமான மதுபானம் அடங்கிய 42 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை கூறியுள்ளது. இவர் அரசு மதுபானக் கடையில் வாங்கி அதிக விலைக்கு விற்கு வந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி