போலீசிடம் இருந்து தப்ப முயன்ற கைதி என்கவுண்டர்

61பார்த்தது
போலீசிடம் இருந்து தப்ப முயன்ற கைதி என்கவுண்டர்
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மத்திய சிறையில் இருந்து 3 கைதிகளை மருத்துவ பரிசோதனைக்காக 4 காவலர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசிடம் இருந்து நஜீப் சிங் என்ற கைதி தப்ப முயன்றதாக தெரிகிறது. மேலும், கூர்மையான ஆயுதத்தால் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக குற்றவாளியை போலீசார் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகிறது.