தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 33 ஏக்கர் அரசு நிலத்தை நான்கு வாரத்துக்குள் மீட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் பல்கலைக்கழகம் 35 ஆண்டுகளாக அனுபவித்து வரும் புறம்போக்கு நிலத்தை, தங்களுக்கே ஒதுக்கும்படி வைத்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்தான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.