சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை தங்க கவசங்களை வைத்து பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது. இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் ஜெயராம் மற்றும் சபரிமலை முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போத்தி இணைந்து பூஜை செய்யும் வீடியோ விசாரணைக்கு அடிப்படை காரணமாகக் கூறப்படுகிறது.