கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் இல்லம் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று (மே 27) சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள பினராயி விஜயன், "இது முறையான விசாரணை அல்ல, திட்டமிடப்பட்ட
அரசியல் சதி; இதன் மூலம் எனது வீட்டில் எப்போது சோதனை நடக்கும் என நீண்டகாலமாக காத்திருந்த ராகுல் காந்தியின் விருப்பம் இப்போது நிறைவேறியுள்ளது" என சாடியுள்ளார்.