விமானத்தில் இயந்திர கோளாறு.. 262 பயணிகள் அவதி

58பார்த்தது
விமானத்தில் இயந்திர கோளாறு.. 262 பயணிகள் அவதி
சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி 262 பயணிகளுடன் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பே விமானி கோளாறை கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் சுமார் 12 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிட்டது. பின்னர் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.