அதிமுக உட்கட்சி மோதல்களுக்கு இடையே, திருச்சியில் அக்கட்சிக்கு முக்கிய சரிவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி பொறியாளர் ஆர்.கே.விக்னேஷ், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். தேர்தல் பின்னடைவு மற்றும் இபிஎஸ்-வேலுமணி தரப்பு மோதலால் அதிருப்தியிலுள்ள அதிமுகவினர், வளர்ந்து வரும் தவெகவை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதன் அறிகுறியாக இந்நகர்வு பார்க்கப்படுகிறது.