மூத்த சூழலியலாளர் மாதவ் காட்கில் புனேவில் உடல்நலக் குறைவால் காலமானார். 83 வயதான அவர், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சூழலியல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றியவர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அவரது அடிப்படை மற்றும் அறிவியல் அணுகுமுறை உலகளவில் பாராட்டப்பட்டது. சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.