பவானிசாகர் தொகுதியில் வரும் 15ம் தேதி இபிஎஸ் பரப்புரை

7பார்த்தது
பவானிசாகர் தொகுதியில் வரும் 15ம் தேதி இபிஎஸ் பரப்புரை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில், வரும் 15ஆம் தேதி தனது தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு இதுவரை 181 தொகுதிகளில் பரப்புரை சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் பரப்புரை செய்யவுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி