நெல் கொள்முதல் செயல்பாட்டில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதால் விவசாயிகள் பெரும் நெருக்கடியில் உள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொள்முதல் மையங்களில் போதுமான லாரிகள், எடையாளர் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்படாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் நீண்ட நேரம் கிடப்பிலே உள்ளது. நெல் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.