சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கட்சியின் அடுத்தகட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் வரும் காலத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் எதிர்கால உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, மதுரை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் நேரில் இந்த முக்கிய ஆலோசனையை மேற்கொள்கிறார்.