அதிமுகப் பிளவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணியில் லீமா ரோஸ் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்நிலையில், பல்வேறு முக்கிய நிர்வாகிகளின் பதவிகளை இபிஎஸ் பறித்த நிலையில், லீமா ரோஸ் பதவியை பறிக்கவில்லை. இதற்கு காரணமாக லீமா, அதிமுகவில் சேர்க்க கொடுக்கப்பட்ட பணத்தையும் பதவி வழங்கிய பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டு கட்சி பதவியில் இருந்து நீக்குங்கள் என்று கூறியதாக தகவல் வெளியாகிவுள்ளது.