அதிமுக உடன் தவெக கூட்டணி கிடையாது என்பது உறுதியாகியுள்ளது. தவெகவின் இந்த முடிவு அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி பரப்புரைகளில் கூறி வந்தார். மேலும், அதிமுக கூட்டத்தில் தவெக கொடிகளும் பறந்தன. இந்நிலையில், விஜய்யிடம் தொலைபேசி வாயிலாக இபிஎஸ் பேசியதாகவும், கூட்டணிக்கு அழைத்ததற்கு,
விஜய் எந்த பதிலும் கூறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இபிஎஸ் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.