இபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் முடிந்தது

9பார்த்தது
அதிமுக சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவதற்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் ரகசியமாக கையெழுத்து பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான அவசர ஆலோசனை கூட்டம் இன்று (மே 19) நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த தீவிர ஆலோசனையின் போது, உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மிக முக்கிய முடிவுகள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நன்றி:NewsTamil