அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சத்தியமங்கலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும், மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும், சிறுபான்மை மகளிருக்கு வட்டியில்லா சுயதொழில் கடன் வழங்கப்படும், மேலும் முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என உறுதியளித்துள்ளார்.