சபாநாயகரை மீண்டும் சந்திக்க இபிஎஸ் திட்டம்

4080பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில், மீண்டும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது கட்சியில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நகர்வுகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்கள் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவில் நிலவி வரும் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் இந்த திடீர் சந்திப்பு முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி:News18

தொடர்புடைய செய்தி