அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எழுதிய ‘சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்' என்ற புதிய புத்தகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்.24) வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்து புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.