அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்குத் தடை கோரிய வழக்கை இபிஎஸ் வாபஸ் பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக பொதுக்குழு மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளை ஓபிஎஸ்-ஸும் திரும்பப் பெற்றுள்ளார். இரு தரப்பும் வழக்குகளை வாபஸ் பெற்றதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் இதனை முடித்து வைத்துள்ளது.