அதிமுக பொதுச்செயலாளர் எடாப்படி பழனிசாமி மீண்டும் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பயணத்தை தொடங்கவுள்ளார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நவ.30ஆம் தேதி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையனின் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் பேசவுள்ளார். இபிஎஸ்ன் இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.