சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் 200 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி' திரைப்படத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்.17) கண்டு ரசித்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, வேலுமணி ஆகியோருடன் இணைந்து படத்தை பார்த்த அவர், உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். இது குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.