மதுரை திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தேர்தலுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒரு மாநில ஆளுநராகத்தான் இருப்பார் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களின் நிலை இதுதான் என்றும் விமர்சித்தார். மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு பல சட்டங்களைக் கொண்டுவந்தபோதும் இபிஎஸ் குரல் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.