சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக-விற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது சமத்துவ மக்கள் கழகமும் திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்த பேட்டியில், “2026 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், திமுகவுக்கு ஆதரவாக பணியாற்றுவோம்” என்றார்.