அந்தியூர்: ஒரே நாளில் 15 பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

1413பார்த்தது
அந்தியூர்: ஒரே நாளில் 15 பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை
அந்தியூர் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பாக, பிரசவித்த தாய்மார்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. பர்கூர், ஓசூர், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம் மற்றும் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு நவீன லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 15 பேர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி