சாலையில் முகாமிட்ட ஒற்றை யானை - மக்கள் அச்சம்

2பார்த்தது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை வன சோதனைச் சாவடி பகுதியில், இன்று காலை உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சாலையில் முகாமிட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அச்சமடைந்த நிலையில், பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கோடை காலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதி குட்டைகளில் தண்ணீர் நிரப்பி யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி