காட்டுப்பன்றி தாக்கியதில் கால் முறிவு ஏற்பட்டது

10பார்த்தது
காட்டுப்பன்றி தாக்கியதில் கால் முறிவு ஏற்பட்டது
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த தொட்ட மாதி என்ற பெண், வனப்பகுதி ஒட்டியுள்ள காடுகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, காட்டுப்பன்றிகளின் கூட்டம் அவரைத் தாக்கியது. அவர் சத்தம் எழுப்பியதை அடுத்து, அப்பகுதியில் இருந்த மற்ற கால்நடை மேய்ப்பர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.