பெருந்துறை அருகே 11-ம் தேதி நடைபெறும் வேளாண் கண்காட்சி-கருத்தரங்கை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி: ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வரும் 11-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நேற்று (ஜூன் 4) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 11-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்து வேளாண்மைக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைக்கிறார். இந்தக் கண்காட்சியில் 218 அரங்கங்கள் அமைக்கப்பட்டு வேளாண்மைத் துறையின் கீழ் எந்தெந்த பணிகள் செய்து வருகிறது என்பது தொடர்பாகக் காட்சிப்படுத்தப்பட உள்ளோம் என்றார்.