அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை

3பார்த்தது
அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை
அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணன், ரமணிதரன், அந்தியூர் நகரச் செயலாளர் டி. எஸ். மீனாட்சி சுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் எஸ். ஜி. சண்முகாந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.