ஈரோடு: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை

1258பார்த்தது
ஈரோடு: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை
ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் நேற்று இரவு சின்னசாமி என்பவரின் தோட்டத்தில் புகுந்து வாழை பயிர்களை சேதப்படுத்தின. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த சின்னசாமி, பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றார். பின்னர் அப்பகுதி விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி