ஆப்பக்கூடல் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் முன்னிலையில் மாணவ மாணவியரின் கோரிக்கையான நிழல் குடை கட்டுமானத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. மாணவர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர், கல்லூரியின் முதல்வர், இயக்குனர், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.