ஈரோடு மாவட்டத்தில் உள்ள 500 அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக "வனமும் வாழ்வும்" என்ற சிறப்பு நிகழ்வு இன்று கோபி பி கே ஆர் கலை அறிவியல் கல்லூரியில் வனத்துறையால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், அரசுப் பள்ளி மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வனத்துறை அதிகாரிகள் வழங்கினர். இது மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.