அந்தியூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் 2,700 வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் செவ்வாழை தார் ஒன்றுக்கு ரூ. 650, தேன் வாழை ரூ. 350, பூவன் ரூ. 200, ரஜதாலி ரூ. 600, மொந்தன் ரூ. 150, ரெப்பஸ்டா ரூ. 350, பச்சை நாடா ரூ. 360 என விலை நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன. கேரளா, கர்நாடகா மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இந்த ஏலத்தில் பங்கேற்று வாழைத்தாரை வாங்கிச் சென்றனர்.