தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக, 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்தியூரில் அமையவுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டிடப் பணிகளை துவக்கி வைத்தார். இந்த விழா அந்தியூரில் உள்ள தவிட்டுப்பாளையம் மாணுவக் காடு இடத்தில் நடைபெற்றது. இதில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.