பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி கூட்டம்

506பார்த்தது
பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி கூட்டம்
பாஜக சார்பில் அந்தியூர் ஸ்ரீவாரி மஹாலில், பாஜக மாவட்ட விவசாய அணி மற்றும் அந்தியூர் தெற்கு மண்டலம் சார்பில் 125 நாள் வேலை உத்தரவாத திட்டத்தின் பயிற்சி முகாம் மற்றும் பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் வக்கீல் சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட விவசாய அணி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாநில விவசாய அணி தலைவர் ஜி. கே. நாகராஜ், மாவட்ட தலைவர் எஸ். எம். செந்தில் குமார், பி. ஜி. மோகன் குமார், ஏ. பி. எஸ். பர்குணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தென்னை மயில்சாமி உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் என சுமார் 450 பேர் இதில் பங்கேற்றனர். மண்டல விவசாய அணி தலைவர் செல்வராஜ் நன்றியுரை கூறினார்.