ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள், பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்தபோது, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் (18) என்பவர் செல்போன் மூலம் காதலிக்கும்படி துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த மாதம் அவரது பாட்டி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். அதன் அடிப்படையில், நேற்று இரவோடு இரவாக சதீஷ் அந்தியூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.