பொது மக்களுக்கு இடையூறாக கட்டப்பட்ட கட்டிடம் அகற்றப்பட்டது

1119பார்த்தது
பொது மக்களுக்கு இடையூறாக கட்டப்பட்ட கட்டிடம் அகற்றப்பட்டது
அந்தியூர் அருகேயுள்ள சின்னத்தம்பிபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட வெள்ளையம்பாளையம் நாடார் குடியிருப்பைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர், பஞ்சாயத்து சொந்தமான வீதியில் சுமார் 3x3 அடி பரப்பளவில் குளியலறை கட்டி, ஐந்தாண்டுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தார். தற்போது அதே வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், ஆக்கிரமிப்பை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. மாதேஸ்வரன் தனக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் உள்ளதாக கூறி மறுத்ததால், வருவாய்த்துறை மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. நேற்று, அந்தியூர் தாசில்தார் இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பிற அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது, மாதேஸ்வரன் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் செய்தார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு சமரசம் அடைந்ததை அடுத்து, பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களைக் கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி