திருச்சியைச் சேர்ந்த செந்தில்குமார் (45) தனது மனைவி ஜெய்ஸ்ரீ (43) மற்றும் மகள் பூரணி (17) உடன் மைசூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். மகளை கல்லூரியில் சேர்ப்பது குறித்து விசாரிக்கச் சென்றபோது, பர்கூர் மலைப்பாதையில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் கார் நிலைதடுமாறி 100 அடி பள்ளத்தில் விழுந்தது. அப்பகுதி வாகன ஓட்டுநர்கள் அவர்களை மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.