ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற கால்நடை சந்தை, நேற்று பெய்த கன மழையால் வெறிச்சோடி காணப்பட்டது. குறைந்த அளவே கால்நடைகள் கொண்டு வரப்பட்ட நிலையில், விவசாயிகளும் வியாபாரிகளும் குறைவாகவே வந்திருந்தனர். இதனால், கால்நடைகளுக்கு சரியான விலை கிடைக்காததால், வியாபாரிகள் அதிக அளவில் கால்நடைகளை திரும்ப எடுத்துச் சென்றனர். சந்தை கலை இழந்து காணப்பட்டது.