ஆலம்பாளையம் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

2பார்த்தது
ஆலம்பாளையம் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, ஆசிரியர் தின விழா, பள்ளி ஆண்டு விழா, தமிழ் கூடல் மற்றும் இலக்கிய மன்ற விழா, மகிழ் முற்றம் விழா, விளையாட்டு விழா என ஐம்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அந்தியூர் ஏ. ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் ஜெயகுமார், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி