அந்தியூரில் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

1பார்த்தது
அந்தியூரில் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூரில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் கலந்து கொண்டு தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து அனைவருக்கும் விருந்தும் பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் கிருஷ்ணவேணி, திமுக செயலாளர் நாகேஸ்வரன், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி மற்றும் கவுன்சிலர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி