பர்கூர் மலைப்பாதையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி

1பார்த்தது
பர்கூர் மலைப்பாதையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து மைசூர் செல்லும் பர்கூர் மலைப்பாதையில், பவானி நெடுஞ்சாலை உட்கோட்டம் அந்தியூர் நெடுஞ்சாலை பிரிவிற்குட்பட்ட செல்லம்பாளையம் பர்கூர் கொள்ளேகால் சாலையில் மூன்று இடங்களில் தடுப்புச் சுவர் கட்டுதல் பணிகளை, 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் பாபு சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.