காகங்கள் இறந்து கிடைக்கின்றன பறவை காய்ச்சலா மக்கள் பீதி

2பார்த்தது
காகங்கள் இறந்து கிடைக்கின்றன பறவை காய்ச்சலா மக்கள் பீதி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள்ள மரங்களில் மாலை நேரங்களில் நூற்றுக்கு மேற்பட்ட காகங்கள், கொக்கு, நாரை, சிட்டுக்குருவி உள்ளிட்ட பல்வேறு பறவைகள் தங்கி வருகின்றன. இரவு நேரங்களில் பறவைகளின் சத்தத்தால் அப்பகுதி பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தினந்தோறும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காகங்கள் இறந்து விழுவதால், அப்பகுதி மக்கள் பறவை காய்ச்சலால் இவை பாதிக்கப்பட்டுள்ளனவோ என அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி