தாளவாடி அருகே தென்னை தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்

71பார்த்தது
தாளவாடி அருகே தென்னை தோட்டத்தில் புகுந்து யானை அட்டகாசம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் காளசாமி (49), என்பவர் தென்னை சாகுபடி செய்துள்ளார். நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த தென்னை மரத்தை சேதப்படுத்தியுள்ளன. காலையில் சென்று தோட்டத்தில் பார்த்தபோது தென்னை மரம் சேதப்பட்டிருந்தது தெரிய வந்தது. யானைகளால் 40 தென்னை மரங்கள் சேதப்பட்டன. வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.