அந்தியூர் அடுத்த கும்பரவாணி வனப்பகுதியை ஒட்டிய மாரக்குட்டி தோட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வனத்திலிருந்து வெளியேறிய ஆண் யானை சுமார் 25க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சாப்பிட்டும், முறித்தும் சேதப்படுத்தியது. மேலும், தங்கராஜ் என்பவரின் தோட்டத்தில் புகுந்த யானை, நெற்பயிர்களை மிதித்து, சாப்பிட்டு நாசப்படுத்தியது. உத்தராசு, கிட்டு என்பவரின் தோட்டத்திலும் யானை புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியது. பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் விவசாயிகள் யானையை விரட்டினர்.