ஈரோடு: போக்ஸோ வழக்கில் கைதானவர் தப்பியோட முயற்சி

1522பார்த்தது
ஈரோடு: போக்ஸோ வழக்கில் கைதானவர் தப்பியோட முயற்சி
ஈரோடு, அந்தியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (37) மீது போக்ஸோ வழக்கு, பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி, வழக்கு விசாரணைக்காக ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்து திரும்பும்போது, நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து தப்பிக்க முயன்றார். இதைப் பார்த்த ஆயுதப் படை போலீஸார் அவரைப் பிடித்துள்ளனர். இதில் கார்த்திக்கு வலது இடுப்பு, கால்களில் காயம் ஏற்பட்டது. அவர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி