ஈரோடு: வாக்குச்சாவடி இடமாற்றம்.. மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

0பார்த்தது
ஈரோடு: வாக்குச்சாவடி இடமாற்றம்.. மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
கொடுமுடி அருகே குட்டப்பாளையம் கிராம மக்கள், வாக்குச்சாவடி எண் 195-ஐ வீரப்பகவுண்டன் காட்டூரிலிருந்து பெரியூருக்கு மாற்றியதை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர். கடந்த 70 ஆண்டுகளாக குட்டப்பாளையம் மக்கள் வீரப்பகவுண்டன் காட்டூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் வாக்களித்து வந்தனர். வாக்குச்சாவடி முகவரி குட்டப்பாளையம் என இருந்தும், பெரியூர் என மாற்றப்பட்டதால், பிப்ரவரி 2-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கிராம மக்கள் புதன்கிழமை திரண்டு தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you