அந்தியூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளை குறிவைத்து, சித்த மருத்துவ முறைப்படி குழந்தைப்பேறுக்கு மருந்து தருவதாகக் கூறி நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கொல்லபாளையம் பகுதிக்கு வந்த ஆணும், பெண்ணும் அடங்கிய கும்பல், ஒரு தம்பதியினரிடம் ரூ.18 ஆயிரம் பெற்றுக்கொண்டு, மயக்க மாத்திரை கொடுத்து ஏமாற்றிச் சென்றுள்ளது. பாதிக்கப்பட்ட தம்பதி புகார் அளித்ததை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.